எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

விற்பனை எந்திரங்கள்

Kubota-வின் தானியங்கி விற்பனை எந்திரம், 1958ல் உருவாக்கப்பட்ட “ஹெல்த் ரெக்கார்டர்” தானியங்கி எடை எந்திரத்தின் அனுபவத்திலிருந்து உருவானது. அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, Kubota முதலில் தானியங்கி பால் விற்பனை எந்திரம் ஒன்றை 1962ல் உருவாக்கியது. அதுமுதல், எண்ணற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம், எங்களது விற்பனை எந்திரம் எங்களது முக்கியத் தயாரிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இக்காலங்களில், தொழிற்சாலைகள், அலுவலகக் கட்டிடங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் எந்நேரமும் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் விற்பனை எந்திரங்கள் ஜப்பான் மக்களின் வாழ்க்கை முறைக்கு இன்றியமையாதது. ஜப்பானில் விற்பனை எந்திரங்களில் 50 வருடங்களுக்கும் அதிகமான வரலாறுடைய Kubota, இப்பொழுது பிற நாடுகளுக்கும் முக்கியமாக தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவில் விரிவடைந்து வருகிறது. இந்தச் சந்தைகளுக்காக, உலகளாவிய விவரக்குறிப்புடைய ஜப்பான் வகை விற்பனை எந்திரங்களை Kubota வழங்குகிறது, இவற்றில் அவற்றுக்கு இணையான நவீன ஆற்றல் சேமிப்புத் தொழில் நுட்பமும், உட்புற விற்பனை எந்திரத்தின் வசதியும் உள்ளது.
இவை மட்டும் இல்லாமல், விற்பனை எந்திரங்களின் பிரபலத்தை மேம்படுத்தும் குறிக்கோளுடைய நிகழ்ச்சிகள் போன்ற ஊக்குவிப்புச் செயல்பாடுகளிலும் இது பங்கேற்கிறது.

  • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

மின்சக்தி சேமிப்புத் தொழில்நுட்பங்கள்

மின்சக்தி சேமிப்புக்கான தேடல், இந்த வகையிலேயே குறைந்தளவு ஆற்றலை நுகரும் விற்பனை எந்திரங்களைச் சாத்தியமாக்கியுள்ளது.

பேரிடம் மீட்புச் செயல்பாடு

அவசரகால நிலைமையில் மின்சாரம் இல்லாத போது இலவசமாய் பானத்தை வழங்குவதைச் சாத்தியமாக்குகின்ற தெரிவுகள் எங்கள் விற்பனை இயந்திரங்களில் உள்ளன.

வரிசை

Kubota விற்பனை எந்திரங்கள், பரந்த அளவிலான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது

  • கேன்/பாட்டில் பானம் விற்பனை இயந்திரம்
  • உயரம் குறைவான விற்பனை இயந்திரம்
  • பல பொருட்கள் விற்பனை இயந்திரம்

எங்கள் தொழில்நுட்பங்கள்

  • “ட்வின் ஸ்மார்ட்” மின்சக்தி சேமிப்பு அமைப்பு
    குளிர்விக்கவும், வெப்பப்படுத்தவும் தனித்தனியான இரண்டு கம்பிரஸர் சர்க்யூட்கள், குறைவான மின்சக்தி நுகர்வுக்கான உகந்த இயக்கத்தை வருடம் முழுவதும் இயலச்செய்கிறது.
  • அவசரகாலங்களுக்கான ரெஸ்க்யூ வெண்டர்
    இயற்கைப் பேரிடர்கள் அன்றாட வாழ்க்கையோடு இணைந்துவிட்ட ஜப்பானில் தோன்றி, அவசரகால பேட்டரியைக் கொண்டுள்ள எங்கள் ரெஸ்க்யூ வெண்டர், அவசரகால நிலைமையின் போது இலவசமாய் பானத்தை வழங்கும் திறன் கொண்டது. Kubota’வின் அசல் வடிவமானது, உள்ளேயுள்ள பேட்டரி வெகு காலத்திற்கு நல்ல நிலைமையில் பாதுகாக்கப்படுவதை சாத்தியமாக்குகிறது.

பயன்பாடு

Kubota-வின் விற்பனை எந்திரங்கள் ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

பயன்பாட்டுக் காட்சி (சீனா)

பயன்பாட்டுக் காட்சி (பிற ஆசிய நாடுகள்)

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop