எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

மெம்பரேன் தீர்வுகள்

Kubota, மெம்பரேன் தொழிலை 1986-இல் தொடங்கியது. 1991 முதல், மெம்பரேன் பயோரியாக்டர் (MBR) சந்தையின் முன்னோடியாக, KUBOTA Submerged Membrane Unit™ (SMU)-ன் பயன்பாட்டை Kubota செயலாற்றலுடன் உலகம் முழுவதும் பரவச்செய்தது.
நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை, மெம்பரேனைப் பயன்படுத்தி திரவங்களிலிருந்து, திடப்பொருட்களைப் பிரிப்பதுடன் இணைப்பதன் மூலம் வீடு மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீரை MBR-ஆல் சுத்தப்படுத்த இயலும். இந்த மெம்பரேன், தங்கியுள்ள திடப்பொருட்கள் மற்றும் நோயுண்டாக்கும் இ-கோலி பாக்டீரியாவை அகற்றுகிறது, இதன் மூலம் கழிவுநீரை, கழிவறையில் கழுவுவதற்கான அல்லது தெளிப்பதற்கான நீராக மீண்டும் பயன்படுத்த முடியும்.
மறுபுறத்தில், பல்வேறு வகையான கழிவுநீருக்கு MBR வசதியை வடிவமைப்பது சிரமம், ஏனெனில் ஒவ்வொரு கழிவுநீரும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கும். இதற்காக, Kubota, பயன்பாடுகள் மற்றும் அனுபவங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள அதேசமயம், உயர்ந்தளவு தொழில்நுட்பத் திறனை உருவாக்கியுள்ளது, இது உலகளாவிய நீர் சுத்திகரிப்பில் மிகுந்த நற்பெயரை உண்டாக்கியுள்ளது. இப்பொழுது, Kubota, ஒவ்வொரு தளத்தின் குறிப்பிட்ட தேவையையும் எதிர்கொள்ளுமாறு 4,900க்கும் மேற்பட்ட நிறுவுதல்களையும், இணையற்ற அனுபவங்களையும் பெற்றுள்ளது.

  • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

மிகச்சிறந்த வழிந்தோடும் நீரின் தரம்

மெம்பரேன் பயோ ரியாக்டர் (MBR) தங்கியுள்ள திடப் பொருட்களை (SS) அகற்றுவது மட்டுமல்லாமல், தனது நீடித்த ஸ்லட்ஜ் ரிடென்ஷன் டைம் (SRT)-ஐ சாதகமாகக் கொண்டு டிடர்ஜெண்ட்கள் போன்ற மட்காத பொருட்களையும் அகற்றுகிறது. இது சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் பயன்படுத்துவதை இயலச் செய்கிறது.

எளிமையான பராமரிப்பு

KUBOTA Submerged Membrane Unit™ (SMU)-ல் திரும்பும் ஸ்லட்ஜ் விகிதத்தை சரிசெய்வது அல்லது நுண்ணுயிரிகளை நுண்ணோக்கி மூலம் கண்காணிப்பது தேவை இல்லை. ட்ரான்ஸ் மெம்பரேன் அழுத்தம் மற்றும் நீரின் அடிப்படைத் தரப் பகுப்பாய்வு மட்டுமே தேவைப்படும், இவை இரண்டையுமே நீங்கள் எளிதாகக் கற்க இயலும். அடிப்படை அறிவு மட்டும் இருந்தால், புதிதாக வருபவர்கள் கூட SMU-வை இயக்குவதை எளிமையாக உணர்கிறார்கள்.
மேலும், மெம்பரேன் காட்ரிஜை ஒன்றன் பின் ஒன்றாக மாற்ற இயலும் மற்றும் இதன் மிக அதிக உறுதித்தன்மையின் காரணமாக இதை அடிக்கடி மாற்றத் தேவைப்படாது. உதாரணத்துக்கு, ஐரோப்பாவில் உள்ள 1 வது MBR கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையான பார்லாக் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் 10 வருடங்களுக்குள் வெறும் 6% மெம்பரேன் கார்ட்ரிட்ஜ் மட்டுமே மாற்றப்பட்டன.

குறிப்பிடத்தக்க சிறிய கால்சுவடு

மெம்பரேன் பயோ ரியாக்டர் (MBR) ஆலையின் கால்சுவடு, கன்வென்ஷனல் ஆக்டிவேட்டட் ஸ்லட்ஜ் (CAS) ஆலையைவிடக் குறிப்பிடத்தக்க அளவு சிறியதாகும்.
KUBOTA Submerged Membrane Unit™ (SMU) அதிக செறிவு தூண்டப்பட்ட ஸ்லட்ஜில் செயல்பட இயலும் என்பதால், ஏரேஷன் டேங்கின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், திடப்பொருட்களை திரவங்களிலிருந்து பிரிக்க இயலும் என்பதால், இது புவியீர்ப்பு படிதல் முறைப்படி திடப்பொருட்கள் அகற்றப்படும் இரண்டாம்நிலை க்ளாரிஃபையருக்கான தேவையை அகற்றுகிறது.

வரிசை

வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவையை எதிர்கொள்ள பல்வேறு அளவுகள் மற்றும் உள்ளமைவுகளை Kubota வழங்குகிறது.
எஃபெக்டிவ் மெம்பரேன் ஏரியா(m2) 20〜600

  • ES series
  • Ek series
  • RM series
  • RW series
  • SP series

எங்கள் தொழில்நுட்பங்கள்

  • எளிமையான செயல்முறை
    KUBOTA Submerged Membrane Unit™ (SMU) உள்ள MBR, கன்வென்ஷனல் ஏக்டிவேட்டட் ஸ்லட்ஜ் (CAS) -ஐ விட மிகவும் எளிதானது. தற்போதுள்ள CAS ஆலையின் ஏரேஷன் டேங்கில் SMUகளை பொருத்துவதன் மூலம், தற்போதுள்ள CAS ஆலையை எளிதாக MBR ஆலையாக மறுசீரமைக்க இயலும்.
  • இடர்ப்பாடு அற்ற இயக்கம்
    The KUBOTA Submerged Membrane Cartridges, ஃப்ளாட் பிளேட் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த உள்ளமைவு, மெம்பரேன்களுக்கு இடையிலான இடைவெளியை சுத்தமாக வைத்து, குப்பைகள் மற்றும் இடையூறுகள் சேர்வதைக் குறைக்கிறது. எனவே, இது இரசாயன சுத்தப்படுத்தலுக்கான தேவையைக் குறைக்கிறது மற்றும் கால இடைவெளியை அதிகரிக்கிறது.
  • எளிதான பராமரிப்பு
    Submerged Membrane Cartridges ஆர்கானிக் கறைபடிதலுக்காக சோடியம் ஹைப்போகுளோரைட் அல்லது ஆர்கானிக் அல்லாத கறைபடிதலுக்கு ஆக்ஸாலிக் அமிலம் போன்ற இரசாயனங்களைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். மெம்பரேன் யூனிட்களை மெம்பரேன் டேங்கிலிருந்து அகற்றி, அதற்கெனத் தனியாகக் கட்டப்பட்ட சுத்தம் செய்தல் தொட்டியில் வைக்கப்பட வேண்டியது கிடையாது என்பதால், இந்த அமைப்பானது மூலாதாரங்களைக் குறிப்பிடத்தக்க வகையில் மிச்சப்படுத்துகிறது.

பயன்பாடு

Kubota-வின் மெம்பரேன் தீர்வுகள் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு முதன்மையானதாகும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

மிட்டாய் தொழிற்சாலை

பால்பண்ணை தொழிற்சாலை

சோயாபீன் பேஸ்ட் தொழிற்சாலை

உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop